தூத்துக்குடி மாவட்டத்தில் ஒன் ஸ்டாப் சென்டரில் உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர்

தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார் மற்றும் பொது இடங்களில் குடும்பத்தில், சமுதாயத்தில்,
பணிபுரியும் இடங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் துவங்கப்படவுள்ள
“ஒன் ஸ்டாப் சென்டரில் (one stop center) உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்கள்
விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள்
தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார் மற்றும் பொது இடங்களில் குடும்பத்தில்,
சமுதாயத்தில், பணிபுரியும் இடங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில்
“ஒன் ஸ்டாப் சென்டர் (one stop center) துவங்கப்படவுள்ளது. அதில் பணிபுரிய
கீழ்க்கண்ட பணியிடங்கள் மைய நிர்வாகி பணியிடம் -1, மூத்த ஆலோசகர் பணியிடம் -1,
Case Worker பணியிடம் -2, IT Staff பணியிடம் -1, உதவியாளர்(சமையலர் மற்றும்
அலுவலக உதவியாளர்) பணியிடம் -1, காவலர் மற்றும் ஓட்டுநர் பணியிடம் -1 ஆகிய
பணியிடங்களுக்கு பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில்
தகுதியான நபர்கள் தூத்துக்குடி மாவட்ட சமூகநல அலுவலகத்தில் தங்கள் சுய
விவரங்களுடன் 15.06.2019-க்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

official Notification Link https://cdn.s3waas.gov.in/s3019d385eb67632a7e958e23f24bd07d7/uploads/2019/06/2019060410.pdf