பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறையில் அலுவலக உதவியாளர் வேலை வாய்ப்பு

பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறை அண்ணா சாலை, டி.எம்.எஸ் வளாகம், சென்னை – 600 006-ல் உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு கீழ்கண்ட தகுதிகளின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்: அலுவலக உதவியாளர்

கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் இளநிலை பட்டம் வரை

அதிகபட்ச வயது வரம்பு 01.03.2021அன்றுள்ளவாறு)
1. B.C (Muslim) -32
2. S.C -35
3. M.B.C & D.C -32
4. மேற்குறிப்பிட்டுள்ள வகுப்பினரில், ஆதரவற்ற விதவைகள் -35
5. மேற்குறிப்பிட்டுள்ள வகுப்பினரில், மாற்றுத் திறனாளிகள் – வயது உச்ச வரம்புடன் கூடுதலாக 10 ஆண்டுகள்.
6. மேற்குறிப்பிடப்பட்டுள்ள வகுப்பினரில், முன்னாள் ராணுவத்தினர் – 53
தேர்வுக்கான தகுதி விவரம்:
1. கல்வித்தகுதி : குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி முதல் இளநிலை பட்டம் வரை (பள்ளி/கல்லூரியினால் வழங்கப்பட்ட மாற்றுச்சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்).
2. வயது : மேற்குறிப்பிட்டுள்ளவாறு (வயது குறிப்பிட்ட அரசு சார்ந்த அமைப்பு வழங்கிய அடையாளச்சான்று/பள்ளி மாற்றுச்சான்றிதழ்).
சாதிச்சான்றிதழ் : வருவாய்த்துறையினரால் வழங்கப்பட்ட சான்றிதழ்.
4. பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் வகுப்பைச் சார்ந்தோருக்கான காலிப்பணியிடத்திற்கு முன்னுரிமை பெற்றவருக்கு (முன்னாள் இராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற விதவைகள்) முன்னுரிமை வழங்கப்படும்.
5. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் வகுப்பைடச சார்ந்தோருக்கான காலிப்பணியிடத்திற்கு தமிழ்வழிக் கல்வி பயின்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மேற்குறிப்பிட்டுள்ள சான்றிதழ்களுடன் அனுப்ப வேண்டிய முகவரி.

ஆணையர் பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறை எண். 259, அண்ணா சாலை, டி.எம்.எஸ் வளாகம், சென்னை – 600 006.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 30.10.2021.

இதன் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள், சரியாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் உரிய சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்களும் ஏற்கப்பட மாட்டாது எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

 Link for notification Click Here ->  https://des.tn.gov.in/node/407