கரூர் மாவட்ட சமூக நலத்துறையில் வேலை வாய்ப்பு

சமூகநலத்துறை கட்டுப்பாட்டில் கிராமபுற பெண்களின் முன்னேற்றத்திற்காக இயங்கவுள்ள மகிளா சக்தி கேந்திரா (Mahila Shakthi Kendra) மாவட்ட மகளிர் மையத்திற்கு 1
மகளிர் நல அலுவலர் ( Women Welfare Officer) பணியிடத்திற்கு. மற்றும் 2 திட்ட
ஒருங்கிணைப்பாளர் ( District Co-Ordinators ) பணியிடங்களுக்கும் என 3
காலிப்பணியிடங்களுக்காக முதுநிலை பட்டதாரி / பட்டதாரி பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
ஒரு மகளிர் நல அலுவலர் ( Women Welfare Officer) ) பணியிடம் மற்றும் 2 திட்ட
ஒருங்கிணைப்பாளர் பணியிடங்கள் ( District Co-Ordinators) ஆகிய 3 பணியிடங்களுக்கு
கீழ்கண்ட தகுதிகள் உடைய பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

 1. மகளிர் நல அலுவலர் பணியிடம் மகளிர் நல அலுவலர் பணியிடம் -1 (ஒப்பந்த ஊதியம் மாதம் தலா ரூ.35,000/-)
  1) மகளிர் நல அலுவலர் பணியிடத்திற்கு முதுகலையில் மனித நேயம் / சமூக அறிவியல் / சமூகப்பணி ஏதேனும் ஒரு பிரிவுகளில் விண்ணப்பதாரர் முதுகலை பட்டம் பெற்றிருக்க
  வேண்டும்.
  2) குறைந்தபட்ச வயது 22 முடிந்திருக்க வேண்டும், அதிகபட்ச வயது 35க்கு மிகாமல் இருக்க வேண்டும் கணினி இயக்கும் திறன் நிர்வாகத்திற்கான தகவல் முறை அறிக்கை அனுப்பும்
  திறன் ( Management Information System ) தமிழ் / ஆங்கிலம் மொழியில் ஆளுமை இருத்தல் வேண்டும்.
  3) குடிமைப்பணி அமைப்புகளில் ( Civil Society Organizations ) பணிபுரிந்து முன் அனுபவம் உடையவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
  4) கரூர் மாவட்டத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.
 2. திட்ட ஒருங்கிணைப்பாளர் காலிப்பணியிடங்கள் (ஒப்பந்த ஊதியம் மாதம் தலா ரூ.20,000/-)
  கரூர் மாவட்டத்தில் வசிக்கும் 22 வயது முடிவற்று 35 வயதுக்கு மிகாமல் உள்ள இளங்கலையில் மனித நேயம் / சமூக அறிவியல் / சமூகப்பணி இளநிலை பட்டம் பெற்ற பட்டதாரி
  பெண்கள் விண்ணப்பிக்கலாம். கணினி இயக்கும் திறனுடையவராகவும், பெண்களின் பிரச்சனைகளை கையாளும் திறன் உடையவராக இருத்தல் வேண்டும்.
  விண்ணப்பங்கள் 15 தினங்களுக்குள் (25.10.2019) குறிப்பிட்ட முகவரிக்கு பதிவஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். உறையின் மீது விண்ணப்பிக்கும் பதவியின் பெயர் குறிப்பிட வேண்டும்.
  விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
  மாவட்ட சமூக நல அலுவலகம் மாவட்ட ஆட்சியர் வளாகம், கரூர் -639 007
  என்று மாவட்ட ஆட்சியர் அவர்களால் தெரிவிக்கப்படுகிறது.