தமிழக அரசின் இயல், இசை, நாடக மன்றத்தில் வேலைவாய்ப்பு

தமிழக அரசு கலை பண்பாட்டுத்துறையில் அலுவலக உதவியாளர் வேலை (TN Office Assistant Jobs 2020) அறிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய விவரங்களை இங்கு காணலாம்.

தமிழக கலை பண்பாட்டு இயக்கத்தின் கீழ் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் (Tamil Nadu Eyal Isai Nataka Manram) செயல்பட்டு வருகிறது. இந்த மன்றத்தில் அலுவலக உதவியாளர் பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தில் இரந்து பிப்ரவரி 24 ஆம் தேதி புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி, அலுவலக உதவியாளர் (Office Assistant) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

மொத்தம் ஒரே ஒரு காலியிடம் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். பிறப்படுத்துப்பட்டோர் பிரிவினர் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராகவும், அதிகபட்சமாக 32 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அலுவலக உதவியாளர் பணிக்கான ஊதியம் லெவல் 1 ன்படி, மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், சுய விண்ணப்பம் தயாரித்து, அத்துடன் தேவையான சான்றிதழ் நகல்களை (Xerox) இணைத்து மார்ச் 31 ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
உறுப்பினர் – செயலாளர்,
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்,
31, பொன்னி, பி.எஸ். குமாரசாமி ராஜா சாலை,
சென்னை – 28