தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிப்பவர்கள் பணியில் முன்அனுபவம் அவசியமில்லை. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பிற்கு அக்டோபர் 17 வரை விண்ணப்பிக்கலாம். 

பணியிடம்:-அரியலூர்

பணி : சமூக பணியாளர்/புறத்தொடர்பு பணியாளர்

விண்ணப்பிக்க கடைசி நாள்:-17.10.2020

விண்ணப்பிக்கும் முறை: தபால்

கல்வித் தகுதி:-

இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க போகிறவர்கள் சமூக பணியாளர் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் UG/PG Degree in உளவியல்/ சமூகப்பணி / சமூகவியல் முடித்திருக்க வேண்டும் .மேலும் புறத்தொடர்பு பணியாளர் பணிக்கு 10th/12th படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மேலும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டியதில்லை.கூடுதல் தகுதிகளை தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்ட அறிவிப்பை நன்கு படித்து பார்க்கவும்.


வயது வரம்பு:-

மேற்கண்ட பணிக்களுக்கு 40 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அதனை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்ட அறிவிப்பை பார்க்கவும்.

சம்பள விவரம்:-
இந்த வேலைவாய்ப்பிற்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத சம்பளம் சமூக பணியாளர் பணிக்கு ரூ.14,000/-, புறத்தொடர்பு பணியாளர் பணிக்கு ரூ.8,000 /-என பணியின் தன்மைக்கு ஏற்ப கொடுக்கப்படும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அதனை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்ட அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:-
விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் விண்ணப்பத்தை அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.இந்த விண்ணப்பத்துடன் தகுந்த ஆவணங்களையும் இணைத்து அக்டோபர் 17 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:-

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கான மேலும் தகவலை அறிய அறிவிப்பை Click செய்து அறிந்து கொள்ளலாம்.

Notification Download