தமிழக அரசு ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை பூர்த்தி செய்யும் / நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 25.10.2019
அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர் – ஊர்தி ஓட்டுநர்

சம்பளம் – ரூ.19500 – 62000 என்ற சம்பள ஏற்ற முறையில்
அரசு நிர்ணயம் செய்யும் படிகளுடன்

வயது – 01.07.2019 அன்று 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
வகுப்பு அதிகபட்ச வயது வரம்பு (01.07.2019 அன்றுள்ளவாறு)
பொதுப்பிரிவு 30 வயதுக்குள்
பிற்படுத்தப்பட்ட வகுப்பு
(பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்
அல்லாதவர்)
32 வயதுக்குள்

மொத்த பணியிடங்கள் – 2 எண்ணிக்கை

இடஒதுக்கீடு விவரங்கள்

பொதுப்பிரிவு (GT) – 1
பிற்படுத்தப்பட்ட வகுப்பு
(பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் அல்லாதவர்) (BC) – 1
மொத்தம் 1+ 1= 2

கல்வித்தகுதி – எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்
விதி 5 (2)(a) )

விண்ணப்ப படிவம் – இப்பணியிடத்திற்கான மாதிரி விண்ணப்பபடிவத்தினை
http://www.tnrd.gov.in/ என்ற இணைய தளத்தில்
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கடைசி நாள் – 25.10.2019 – பிற்பகல் 5.45 மணிவரை

நிபந்தனைகள்:

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தினை http://www.tnrd.gov.in/ என்ற இணையதளத்தில் உள்ள மாதிரி விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும்.
1988 மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த அதிகாரியிடம் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்
வாகனம் ஓட்டுவதில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தை 25.10.2019 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள்
இயக்குநர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம், 4வது தளம், பனகல் மாளிகை, சைதாப்பேட்டை,
சென்னை-15 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பப்பட வேண்டும்.
இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தில் உள்ளவாறு விபரங்கள்
முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்படவேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள்
கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.
தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்பட மாட்டாது.
எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு.