தமிழ்நாடு அரசின் திருவல்லீஸ்வரர் திருக்கோயிலில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசின் திருவல்லீஸ்வரர் திருக்கோயிலில் காலியாக உள்ள எழுத்தர்/ஓதுவார் / இரவு காவலர் பணிக்கு தபால் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .இதில் மொத்தமாக மூன்று காலிப்பணியிடங்கள் உள்ளன.இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிப்பவர்கள் பணியில் முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டியதில்லை. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க இத்திருக்கோயிலில் விண்ணப்பத்தை வாங்கி அதனை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

பணியிடம் :- திருவல்லீஸ்வரர் திருக்கோயில் சென்னை

பணி : எழுத்தர்/ஓதுவார் / இரவு காவலர்

விண்ணப்பிக்க கடைசி நாள்:-07.11.2020

விண்ணப்பிக்கும் முறை: தபால்

கல்வித் தகுதி:-
இந்த எழுத்தர்/ஓதுவார் / இரவு காவலர் வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க போகிறவர்கள் 10th மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதுமானது .மேலும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டுய அவசியமில்லை.

வயது வரம்பு:-
மேற்கண்ட பணிக்களுக்கு 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பணிக்கு விண்ணப்பிக்க இருப்பவர்கள் திருவல்லீஸ்வர் கோவிலுக்கு சென்று விண்ணப்பத்தை ரூ.50 கொடுத்து வாங்கி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் விண்ணப்பத்தை அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.இந்த விண்ணப்பத்துடன் தகுந்த ஆவணங்களையும் இணைத்து நவம்பர் 07 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:-

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Notification Download