தூத்துக்குடி மாவட்ட குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் வேலை வாய்ப்பு

தூத்துக்குடி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகிற்கு பின்கண்ட பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர் நிரப்பப்பட உள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ள காலிப்பணியிடம்
புறத்தொடர்பு பணியாளர் – 1
(Outreach Worker )

(தொகுப்பூதியம் ரூ.8000/- (ரூபாய் எட்டாயிரம் மாதமொன்றிற்கு)

கல்வித்தகுதி அனுபவம் மற்றும் வயது:
பத்தாம் வகுப்பு அல்லது 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
குழந்தை சார்ந்த படிப்பு பிரிவில் சான்றிதழ் பெற்றவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
குழந்தை சார்ந்த பணியில் ஒருவருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 40 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் கூடாது.

அதற்கென அமைந்த படிவத்தில் ( (Prescribed Format ) பூர்த்தி செய்து கல்வி, வயது மற்றும் முன்அனுபவம் குறித்த சான்றிதழ்களின் நகல்களுடன் 18.11.2020 அன்று மாலை 05.30-க்குள் பின்கண்ட முகவரிக்கு வந்து சேரும் வகையில் அனுப்பப்பட வேண்டும்.

மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு,
176, முத்துச் சுரபி பில்டிங்,
மணிநகர் 2வது தெரு,பாளை ரோடு,
தூத்துக்குடி 628 003.
தொலைபேசி எண்: 0461 – 2331188