தமிழக அரசின் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவுறு எழுத்தர் ஓட்டுநர் வேலைவாய்ப்பு

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத்தை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் விண்ணப்பிக்கலாம். செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் இந்த வேலைக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.இதில் இரண்டு வகையான பணிகள் மற்றும் காலிப்பணி இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.மேலும் இந்த வேலைவாய்ப்பு பற்றிய முழுமையான தகவல்களை கீழே காணலாம்.

அமைப்பு:-தொழிலாளர்கள் நல வாரியம்
தேர்வு செய்யும் முறை:-எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:-ஆன்லைன்
கடைசி நாள்:- 30.09.2020

பணிகள் மற்றும் காலிபணியிடங்கள்:-
1.பதிவுறு எழுத்தர் – 37
2.ஓட்டுநர் – 32

வயது வரம்பு:-
இந்த வேலைக்கு 18 வயது முதல் 35 வயது வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் தகவலுக்கு கிழே உள்ள அறிவிப்பை பாருங்கள்.

குறிப்பு :

ஆதி திராவிடர், ஆதிதிராவிடர் (அருந்ததியர்), பட்டியல் பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/ சீர் மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லீம்) ஆகிய வகைகளைச் சார்ந்தோர் மற்றும் அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோர் குறைந்தபட்ச பொதுக்கல்வித்தகுதியைக் காட்டிலும் மேற்பட்ட கல்வித்தகுதியைப் பெற்றிருப்பின் அதாவது பத்தாம் வகுப்பு/ மேல்நிலைப்பள்ளி/ பட்டயப்படிப்பு/ பட்டப்படிப்பு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு
உச்ச வயது வரம்பு இல்லை.

சம்பளம்:-
இந்த வேலைக்கு மாத சம்பளம் ரூ.19,000/- முதல் 62,000/- வரை வழங்கப்படும்.

கல்வித்தகுதி:-
இந்த வேலைக்கு எட்டாம் வகுப்பு முதல் டிகிரி அல்லது அதற்கு மேல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகுதி எதுவும் இல்லை.

தேர்வு செய்யும் முறை:-
இந்த வேலைக்கு தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்:-
1.பொதுப்பிரிவினர் ரூ.500/- செலுத்த வேண்டும்.
2.மற்ற வகுப்பினர் ரூ.250/- செலுத்த வேண்டும்.

Notification download

ஆன்லைனில் விண்ணப்பிக்க
40 முத்து கிருஷ்ணாபுரம் மெயின்
தூத்துக்குடி 628001
Contact: 9003646262