தூத்துக்குடி மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் மீண்டும் மாபெரும் வேலை வாய்ப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, கருங்குளம், கயத்தாறு, கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், புதூர், சாத்தான்குளம், திருச்செந்தூர், உடன்குடி மற்றும் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 02.12.2019
அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர் : அலுவலக உதவியாளர், பதிவுரு எழுத்தர், இரவுக்காவலர்

சம்பளம் : ரூ.15900 – 50400 (டுநஎநட – 2) என்ற சம்பளம்
ஏற்ற முறையில் அரசு நிர்ணயம் செய்யும்
இதர படிகளுடன்

வயது : 01.07.2019 அன்று 18 வயது பூர்த்தி
அடைந்திருக்க வேண்டும்.
: அதிகபட்ச வயது வரம்பு (01.07.2019 அன்று
உள்ளவாறு)

பொதுப்பிரிவு : 30 வயதிற்குள்
பிற்படுத்தப்பட்டோர் : 32 வயதிற்குள்
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் : 32 வயதிற்குள்
ஆதிதிராவிடர் / அருந்ததியர்/ஆதிதிராவிடர் / பழங்குடியினர் : 35 வயதிற்குள்

கல்வித் தகுதிகள் : எட்டாம் வகுப்பு ( அலுவலக உதவியாளர் ), பத்தாம் வகுப்பு ( பதிவுரு எழுத்தர்) தேர்ச்சி பெற்றிருக்க
வேண்டும். தமிழில் ( இரவுக்காவலர்) எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் பெற கடைசி நாள்
— 02.12.2019 பிற்பகல் 5.45 மணி வரை

விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம்:

40, முத்து கிருஷ்ணாபுரம் மெயின்

தூத்துக்குடி 628001