அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள பணிமனை உதவியாளர்க்கு விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள 4 பணிமனை உதவியாளர் பதவிக்கு இன சுழற்சி அடிப்படையில்

(1)Electrician தொழிற்பிரிவிற்கு
SCA(P) (Arunthathiyar (Women) Arunthathiyar- (Desitute widow),
(2) FITTER தொழிற்பிரிவிற்கு
BC (other than Backward Class Muslim) – Priority,
(3) Marine Engine Fitter தொழிற்பிரிவிற்கு GT Non Priority (Women) (Desitute Widow),
(4) Turner தொழிற்பிரிவிற்கு SC Priority மற்றும்
1 பண்டக உதவியாளர் பதவிக்கு இன சுழற்சி
அடிப்படையில்
(1) Welder MBC & DNC Non priority (Women) (Desitute Widow) நேரடி நியமனம் செய்யும் பொருட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


சம்பள ஏற்றமுறை 18,200 – 57,000.

வயது வரம்பானது 01.07.2019 அன்று
SC மற்றும் ST பிரிவினருக்கு 18 முதல் 35 வயது வரையும்
MBC மற்றும் BC பிரிவினருக்கு 18 முதல் 32 வயது வரையும்
இதர பிரிவினருக்கு 18 முதல் 30 வயது வரையும் இருக்க வேண்டும்.


கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேறியிருக்க வேண்டும் மற்றும் குறிப்பிட்டுள்ள தொழிற்பிரிவில் NTC/NAC படித்து முடித்திருக்கவேண்டும்.
NTC/NAC இல்லாமல் கூடுதல் கல்வித் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள் ஆவர். மேலும் முன் அனுபவம்
பெற்றிருக்கவேண்டும்.

விண்ணப்பிக்கும்முறை கீழ்காணும் விவரங்கள் அடங்கிய புகைப்படம் ஒட்டிய விண்ணப்பத்தில் உரிய நகல்களுடன் பூர்த்தி செய்யப்பட வேண்டும். விண்ணப்பிக்கும் பதவியின் பெயர்
1) விண்ணப்பிக்கும் பதவியின் பெயர் மற்றும் தொழிற் பிரிவு
2) விண்ணப்பதாரரின் பெயர்
3) தகப்பனார்/கணவர் பெயர்
4) பிறந்த தேதி மற்றும் வயது
5) பாலினம்
6) விண்ணப்பதாரரின் சாதி மற்றும் மதம்
7) கல்வித்தகுதி
8) முன் அனுபவம்
9) நிரந்தர முகவரி
10) தகவல் அனுப்பப்பட வேண்டிய முகவரி
11) வேலைவாய்ப்பு பதிவு எண் இருப்பின் அதன் விபரம்
12) கைப்பேசி எண்/தொலைபேசி எண்
13) மின்னஞ்சல் முகவரி(Email Id)
14) காவல் துறையில் வழக்கு ஏதும் நிலுவையில் இருந்தால் அதன்
விவரம்
15) இணைத்து அனுப்பப்படுகின்ற சான்றிதழ்களின் விவரம்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 16.12.2019 மாலை 5.00 மணி வரை.


விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
துணை இயக்குநர்/முதல்வர்,
அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்,
கோரம்பள்ளம்
தூத்துக்குடி – 628 101.
தொலைபேசி எண். 0461-2340133.


தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் தேர்வுக்குழுவினரால் பரிசீலனை செய்து தகுதியுடையவர்களுக்கு மட்டும் நேர்முகத்தேர்வுக்கு அழைப்பு அனுப்பப்படும் என துணை
இயக்குநர்/முதல்வர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் திரு.எஸ்.பழனி அவர்கள்
தெரிவித்துள்ளார்.

விண்ணப்ப படிவம் கிடைக்குமிடம்
40, முத்து கிருஷ்ணாபுரம் மெயின்
தூத்துக்குடி