அம்மா திட்ட முகாம் இன்று நடைபெறும் கிராமங்கள் கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்

தமிழகத்தில் அனைத்து கிராமங்களில் உள்ள அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க தமிழக அரசு அம்மா திட்ட சிறப்பு முகாமை நடத்தி வருகிறது. இந்த முகாம் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தோறும் அந்தந்த தாசில்தார்கள் தலைமையில் நடக்கிறது. இந்த வாரத்துக்கான முகாம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.இந்த முகாம் தூத்துக்குடி தாலுகா கோரம்பள்ளம் பகுதி-2, ஸ்ரீவைகுண்டம் தாலுகா வடக்கு காரசேரி, திருச்செந்தூர் தாலுகா வீரபாண்டியபட்டினம், சாத்தான்குளம் தாலுகா கருங்கடல், கோவில்பட்டி தாலுகா இடைச்செவல்-2, விளாத்திகுளம் தாலுகா சங்கரலிங்கபுரம், எட்டயபுரம் தாலுகா கீழக்கரந்தை, ஓட்டப்பிடாரம் தாலுகா சிந்தலக்கட்டை, கயத்தாறு தாலுகா குதிரைக்குளம், ஏரல் தாலுகா திருநாவீருடையார்புரம் ஆகிய கிராமங்களில் நடக்கிறது.
பயன்பெறலாம்
இந்த முகாமில் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு-இறப்பு சான்றுகள், சாதிச்சான்று மற்றும் வருவாய் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கை குறித்து விண்ணப்பிக்கலாம். இந்த முகாமில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.