பிராணிகள் வதை தடுப்பு சங்கத்தில் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம்கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் பிராணிகள் வதை தடுப்பு சட்டம் 2001-ன் படியும், உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படியும் பிராணிகள் வதை தடுப்பு சங்கத்தில் உறுப்பினர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.

இதில் உறுப்பினராக சேர கால்நடைகள் மீது விருப்பம் கொண்ட 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்களிடம் இருந்து விண்ணப் பங்கள் வரவேற்கப்படு கிறது.
உறுப்பினர்கள் விண்ணப்பத்தில், அவர்களின் சுய விவரம் மற்றும் சங்கத்தின் சட்டதிட்டங்களுக்கு உட்படுவேன் என்ற உறுதிமொழி அளிக்க வேண்டும். உறுப்பினர்கள் எந்தவித அரசியல் கட்சி செயல்பாட்டிலோ, குற்ற நடவடிக்கையிலோ ஈடுபட்டவராக இருக்க கூடாது. சங்க உறுப்பினர்களுக்கு ஊதியமோ, மதிப்பூதியமோ வழங்கப்படாது.
சேர்க்கை கட்டணம் ரூ.100, ஆண்டு கட்டணம் ரூ.200, செலுத்த வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் வருகிற 31-ந் தேதிக்குள் “உதவி இயக்குனர், கால்நடை பராமரிப்பு துறை, புதுகிராமம், தூத்துக்குடி, தொலைபேசி: 0461-2322802“ என்ற முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். அதன்பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் தகுதி நீக்கம் செய்யப்படும்.