தூத்துக்குடியில் புத்தகக் கண்காட்சி

தேசிய வாசிப்பு இயக்கம் மற்றும் தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம் ஆகியவை சார்பில், தூத்துக்குடி ராமையா மகாலில் புத்தககக் கண்காட்சி மற்றும் விற்பனை கடந்த 4 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.  ஏப்ரல் 14 ஆம் தேதி வரை கண்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்தக் கண்காட்சியில் 30 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.   ஒரு லட்சம் தலைப்புகளில் ஏறத்தாழ ஒரு கோடி புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புத்தகக் கண்காட்சியை பார்வையிடும் அனைவருக்கும் குழந்தை வளர்ப்பு குறித்த புத்தகம் இலவசமாக வழங்கப்படுகிறது.  மேலும், கண்காட்சியை முன்னிட்டு தினமும் கலை நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள் நடத்தப்பட்டு வருகிறது.  கண்காட்சியில் கலந்து கொள்ளும் வாசகர்கள் படித்ததில் பிடித்தது என்ற தலைப்பில் உரையாற்றவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கண்காட்சிக்கான ஏற்பாடுகளை தேசிய வாசிப்பு இயக்கத் தலைவர் எஸ். தம்பான், தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் ரவிவர்மா, செயலர் சரவணன், பொருளாளர் கார்த்திக், தேசிய வாசிப்பு இயக்க நிர்வாகிகள் பாலாஜி, மோகன பிரியா உள்ளிட்டோர் செய்துள்ளனர்.