பிஎஸ்என்எல் சேவை கட்டண விவரத்தை மின்னஞ்சல் மூலம் அனுப்ப ஏற்பாடு: பொதுமேலாளர் தகவல்

தூத்துக்குடி கோட்டத்தில் பிஎஸ்என்எல் சேவைக்கான கட்டண விவரம் மே மாதம் முதல் மின்னஞ்சல் (ஈமெயில்) மற்றும் குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மூலம்  அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் பிஎஸ்என்எல் கோட்ட பொதுமேலாளர் சஜிகுமார் இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:


பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பசுமை மயமாக்குதல் திட்டத்தின் ஒரு பகுதியாக மாதாந்திர தொலைபேசி கட்டண விவரங்களை வாடிக்கையாளர்களுக்கு மே மாதம் முதல் மின்னஞ்சல், குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) போன்ற டிஜிட்டல்  முறை மூலம் அனுப்ப ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனவே, பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் தங்களது செல்லிடப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை அருகேயுள்ள வாடிக்கையாளர் சேவை மையங்கள் அல்லது உள்ளுர் தொலைபேசி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் உடனே வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், வாடிக்கையாளர்கள் தங்களது அருகில் உள்ள பிஎஸ்என்எல் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட கடைகளில் தொலைபேசி கட்டணத்தை செலுத்தும் வசதியும் செய்யப்பட்டுள்ளது என  தெரிவிக்கப்பட்டுள்ளது.