மாவட்ட செஸ் போட்டி: மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு

தூத்துக்குடியில் நவ. 4ஆம் தேதி நடைபெறும் மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட சதுரங்க கழகம், காமராஜ் கல்லூரி மற்றும் டீகே சதுரங்க மையம் ஆகியவை இணைந்து வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடி மாவட்ட அளவிலான செஸ் போட்டி நவ. 4ஆம் தேதி காலை 10 மணிக்கு தூத்துக்குடி காமராஜ் கல்லூரி கலையரங்கில் நடைபெறுகிறது.

போட்டிகள் 9, 11, 13, 17 வயதுக்குள்பட்ட பள்ளி மாணவ, மாணவியர் பிரிவு மற்றும் பொதுப்பிரிவுகளாக நடைபெறுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அனைவரும் பள்ளி மூலமாகவும், தனியாகவும் கலந்து கொள்ளலாம்.

மாணவ, மாணவிகள் பிறப்புச் சான்றிதழ் நகல் அல்லது பள்ளி அடையாள அட்டை நகல் என ஏதாவது ஒன்றை தாக்கல் செய்யவேண்டும். ஒவ்வொரு பிரிவிலும்   மாணவர்களுக்கு தனியாக முதல் 10 பரிசுகளும், மாணவிகளுக்கு தனியாக முதல் 5 பரிசுகளும் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 9698395983, 9487703266, 9486024960 9043985530 என்ற செல்லிடைப்பேசி எண்களை தொடர்பு கொள்ளவும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.