தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் பிப்ரவரி 20 இன்று மின்தடை

தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் புதன்கிழமை (பிப்.20)  மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:  தூத்துக்குடி அருகேயுள்ள அய்யனார்புரம் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (பிப். 20) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது.   இதனால், அன்றையதினம் மாப்பிள்ளையூரணி, அய்யனார்புரம்,  திரேஸ்புரம், தாளமுத்துநகர், டேவிஸ்புரம், தருவைகுளம், சிலுவைப்பட்டி, அழகாபுரி, ராசபாளையம்,பட்டினமருதூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.