தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் நவம்பர் 14 மின்தடை

தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் புதன்கிழமை (நவ. 14) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி நகர்ப்புற மின் வாரிய செயற்பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:


தூத்துக்குடி சிப்காட் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (நவ.14)  மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது.  எனவே,  அன்றையதினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மீளவிட்டான்,  ;சின்னகண்ணுபுரம் பகுதிகள்,  பண்டாரம்பட்டி,  புதூர்பாண்டியாபுரம்,  அகில இந்திய வானொலி நிலையம்,  தொழிற்பேட்டை வளாகம்,  கணேசன்நகர்,  ராஜூவ்நகர்,  மில்லர்புரம் பகுதி, மடத்தூர்,  தபால் தந்தி ஊழியர் குடியிருப்புகள்,  ராஜகோபால் நகர்,  3 ஆவது மைல், பத்திநாதபுரம், சங்கர்காலனி,  எப்சிஐ குடோன்,  நிகிலேசன் நகர்,  இபி காலனி உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது.
இதேபோல, டைமன்ட் காலனி, மதுரை புறவழிச்சாலை, ஏழுமலையான் நகர், அமுதா நகர், ஆசிரியர் காலனி,  சில்வர்புரம்,  பசும்பொன் நகர்,  கதிர்வேல் நகர்,  தேவகி நகர்,  கிருபை நகர்,  பால்பாண்டி நகர், அசோக் நகர்,  செல்சீலினி காலனி, கால்டுவெல் காலனி, வள்ளிநாயகிபுரம்,  3 சென்ட்,  சிவந்தாகுளம் நடுத்தெரு ஆகிய பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.