தேர்தல் பாதுகாப்பு பணி: முன்னாள் படைவீரர்கள் பங்கேற்க அழைப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட விரும்பும் முன்னாள் படைவீரர்கள் ஏப்ரல் 16 ஆம் தேதி நேரில் வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தல் பாதுகாப்புப் பணியில் பணியாற்ற ஏற்கெனவே விருப்பம் தெரிவித்துள்ள மற்றும் விருப்பமுள்ள தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் இளநிலை அலுவலர்கள், முன்னாள் படைவீரர்கள் ஏப்ரல் 16 ஆம் தேதி காலை 10 மணிக்கு தூத்துக்குடி கோரம்பள்ளம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலக மைதானத்துக்கு நேரில் வரவேண்டும்.

வரும்போது, அசல் அடையாள அட்டை மற்றும் 4 நாள்கள் பணியாற்ற ஏதுவாக ராணுவ சீருடை அல்லது பணிபுரிய ஏற்புடைய உடை ஆகியவற்றை கொண்டு வரவேண்டும். மேலும் விவரங்களுக்கு முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநரை நேரிலோ அல்லது 0461-2321678 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.