அக். 12 இல் ஆளுநர் தூத்துக்குடி வருகை: பொதுமக்கள் மனு அளிக்க அழைப்பு

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அக்டோபர் 12 ஆம் தூத்துக்குடி வருகிறார். அன்றைய தினம் பொதுமக்கள் அவரிடம் மனு அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தூத்துக்குடி மாவட்டத்துக்கு அக்டோபர் 12 ஆம் தேதி வருகிறார். அன்றைய தினம் பிற்பகல் 1.30 மணி முதல் 3.30 மணி வரை தூத்துக்குடி அரசு சுற்றுலா மாளிகையில் மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிப் பிரமுகர்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற உள்ளார். எனவே, ஆளுநரிடம் மனுக்களை அளிக்க விருப்பமுள்ளவர்கள் அவரை சந்தித்து மனுக்களை அளிக்கலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.