தூத்துக்குடி புதிய பேருந்து நிலைய நுழைவு வாயில் மேற்கூரை இடிந்து விழுந்தது

தூத்துக்குடி புதிய பேருந்து நிலைய நுழைவாயில் மேற்கூரை வெள்ளிக்கிழமை இடிந்து விழுந்ததில் பெண் காயமடைந்தார்.


தூத்துக்குடி போல்பேட்டை பகுதியில் அமைந்துள்ள புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கோவில்பட்டி, விளாத்திகுளம், மதுரை, திருச்சி, கோவை, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. வெளி மாவட்டங்களுக்கு அதிகளவு பேருந்துகள் இயக்கப்படுவதால், தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்துசெல்கின்றனர்.<br />
இந்நிலையில், புதிய பேருந்து நிலைய நுழைவுவாயில் பகுதியில் உள்ள மேற்கூரை வெள்ளிக்கிழமை காலை திடீரென இடிந்து விழுந்தது. அப்போது, மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாததால் சிமென்ட் காரைத்துண்டு விழுந்ததில் மனநலன் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் காயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மேற்கூரை இடிந்து விழுந்த பகுதியில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.