அரசு செட்-டாப் பாக்ஸ் பெற்ற ஆபரேட்டர்கள் உடனடியாக செயலாக்கம் செய்ய வேண்டும்: ஆட்சியர்

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு கேபிள் செட்-டாப் பாக்ஸ்களை பெற்றுக்கொண்டு தனியார் கேபிள் தொழில் நடத்தி வரும் உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் உடனடியாக அரசு செட்-டாப் பாக்ஸ்களை செயலாக்கம் செய்ய வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி.

இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு செட்-டாப் பாக்ஸ்களை பெற்றுக் கொண்டு, செயலாக்கம் செய்யாமல் தனியார் செட்-டாப் பாக்ஸ்களை கொண்டு கேபிள் தொழில் நடத்தி வரும் அரசு பதிவு பெற்ற உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் உடனடியாக அரசு செட்-டாப் பாக்ஸ்களை செயலாக்கம் செய்ய வேண்டும். அவ்வாறு செயலாக்கம் செய்யாத உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மீது காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அதே பகுதியில் புதிய அரசு பதிவு பெற்ற உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் உருவாக்கப்படுவார்கள்.

எனவே, அனைத்து உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்களும் தாங்கள் பெற்றுள்ள அரசு செட்-டாப் பாக்ஸ்களை உடனடியாக செயலாக்கம் செய்ய வேண்டும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.