தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மருந்தகங்கள் அடைப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (செப். 28) மருந்தகங்கள் அடைக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்கத் தலைவர் ஜான் பிரிட்டோ தலைமை வகித்தார். செயலர் முனுசாமி, பொருளாளர் வீரபத்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தின்போது, இணையதளம் மூலம் மருந்து விற்பனை உரிமம் வழங்குவதை கண்டித்து வெள்ளிக்கிழமை (செப். 28) நடைபெறும் கடையடைப்பு போராட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து மருந்து வணிகர்களும் கலந்துகொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.