தூத்துக்குடியில் இன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடி ஆசிரியர் காலனியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் , தனியார் வேலைவாய்ப்பு முகாம்  வெள்ளிக்கிழமை (மார்ச் 8) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.


இதில், பல முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்குத் தேவையான பணியாளர்களை தேர்வு செய்கின்றனர்.   பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் கணினிப் பயிற்சி கல்வித் தகுதியுடைய பதிவுதாரர்கள் தங்களது சுய விவரம் மற்றும் கல்வி சான்றுகளுடன் பங்கேற்றுப் பயனடையலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் எம். பேச்சியம்மாள் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.