புன்னைக்காயல் தூய ராஜ கன்னி மாதா ஆலயத் திருவிழா தேர் பவனி

ஆத்தூர் அருகேயுள்ள புன்னைக்காயல் தூய ராஜகன்னி மாதா ஆலய 169ஆவது திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை தேர் பவனி நடைபெற்றது.

இந்த ஆலயத்தில் திருவிழா கடந்த 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி காலை திருப்பலியும், மாலையில் மறையுரையும் நடைபெற்றது.  10ஆம் திருநாளன்று மாலையில் திருவிழா மாலை ஆராதனை தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு கிருபாகரன் தலைமையில் நடைபெற்றது. தூத்துக்குடி தூய தாமஸ் மெட்ரிக் பள்ளித் தாளாளர் ஜுலியான்ஸ் மச்சாடோ மறையுரையாற்றினார்.

ஞாயிற்றுக்கிழமை பாளையங்கோட்டை மறைமாவட்ட முதன்மை குரு சேவியர் டெரன்ஸ் தலைமையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. பின்னர் தூய ராஜ கன்னி மாதா திருத்தேர் பவனி நடைபெற்றது.

மாலையில் புனித மிக்கேல் ஆதி தூதர் திருவிழாவினையொட்டி, மாலை ஆராதனையும், இரவு சப்பர பவனியும் நடைபெற்றது.திங்கள்கிழமை காலையில் புனித மிக்கேல் ஆதி தூதர் திருவிழாவினையொட்டி திருப்பலியும், மாலையில் நற்கருணை ஆசீரும்,  கொடியிறக்கமும் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை ஊர்கமிட்டித் தலைவர் செல்டன் பர்னாந்து, கடற்கரை கமிட்டித் தலைவர் இளங்கோ மச்சாது, கோயில் கமிட்டித் தலைவர் டெலிகேட் லோகோ பங்குத்தந்தை கிஷோக் அடிகளார் மற்றும் துணை பங்குத்தந்தை ஜேசுராஜ் அடிகளார் ஆகியோர் செய்திருந்தனர்.