கோட்டம் வாரியாக சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் கோட்டம் வாரியாக சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் நடைபெற உள்ளதாக கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோட்டத்திலும் மாதம் ஒரு முறை கலெக்டர் தலைமையில் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் மற்றும் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த வகையில் வருகிற 27-ந்தேதி காலை 10.30 மணிக்கு தூத்துக்குடி உதவி கலெக்டர் அலுவலகத்தில் வைத்து கூட்டம் நடைபெற உள்ளது. எனவே, தூத்துக்குடி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் கோரிக்கை குறித்த மனுக்களை அளித்து பயன்பெறலாம்.

மேலும், ஒவ்வொரு மாதத்திலும் தாலுகா வாரியாக உதவி கலெக்டர் தலைமையிலும், ஒவ்வொரு குறுவட்ட வாரியாக தாசில்தார் தலைமையிலும் அந்்தந்த வட்டத்திற்கு உட்பட்ட பகுதி மக்கள் பயன்பெறும் வகையிலும் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் மற்றும் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட உள்ளது.
எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் கோரிக்கை குறித்த மனுக்களை அளித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.