ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வாய்ப்பில்லை “பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம்”

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வாய்ப்பில்லை, எனவே பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார். இதுகுறித்து அவர் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தற்போதைய நிலை தொடர்ந்து வருகிறது. இதுதொடர்பான வழக்கில் ஏற்கனவே தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து உள்ளது. அரசு அறிவிப்பின்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசு ஆலையை திறக்கக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளது.மக்கள் என்ன நினைக்கிறார்களோ, அதன்படி அரசு செயல்பட்டு வருகிறது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வாய்ப்பில்லை. எனவே, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம்.