சுரேஷ் ஐஏஎஸ் அகாடெமியில் பயின்ற 4 பேருக்கு குரூப்-1 பதவி

குரூப்-1 தேர்வில் சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் பயின்ற 6 பேர் முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்ற நிலையில் அதில், நான்கு பேர் பணியை தேர்வு செய்தனர்.


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் மூலம் குரூப்-1 பதவிக்கு 85 பணிடங்களுக்கான தேர்வு கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்றது.  இதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கான நேர்க்காணல் கடந்த மாதம் நடைபெற்றது.  அதில், முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்ற 6 பேர் கலந்துகொண்டனர்.  இதற்கிடையே, தரவரிசை பட்டியல் சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் பயின்ற அனிதா துணை ஆட்சியர் பதவியையும்,  எம். சரோஜா காவல் துணைக் கண்காணிப்பாளர் பதவியையும்,  ஸ்ரீதேவி மற்றும் சித்ராதேவி ஆகியோர் வணிகவரித்துறை உதவி ஆணையர் பதவியையும் தேர்வு செய்துள்ளனர். பதவி தேர்வு செய்த நான்கு பேரையும் சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமி நிறுவனர் டி. சுகேஷ் சாமுவேல், தேர்வு ஒருங்கிணைப்பாளர் அந்தோணி பட்டுராஜ் ஆகியோர் பாராட்டினர்.