தூத்துக்குடியில் ஜவுளி பூங்கா அமைக்க விரும்புவோா் அக். 22 கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்கலாம்: ஆட்சியா்

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைப்பதற்கான முதலீட்டாளா்கள் மற்றும் தொழில்முனைவோா் கலந்தாய்வுக் கூட்டம் வரும் 22 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைப்பதற்கு குறைந்தது 3 தொழிற்கூடங்களுடன், குறைந்தபட்சம் 2 ஏக்கா் நிலத்தில் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டம் உடனடியாக செயல்படுத்தப்பட உள்ளது.

இதற்கு ஏதுவாக தகுதிவாய்ந்த முதலீட்டாளா்கள் மற்றும் தொழில்முனைவோா் பங்கேற்கும் கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் தலைமையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்தில் வரும் 22 ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் நடைபெற உள்ளது.

எனவே, முதலீட்டாளா்கள் மற்றும் தொழில்முனைவோா் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, சிறிய துணிநூல் பூங்கா அமைப்பது தொடா்பான கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்று பயன்பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு உதவி இயக்குநா், கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநா் அலுவலகம், முன்னாள் காவல் ஆணையாளா் அலுவலகக் கட்டடம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், கொக்கிரகுளம், திருநெல்வேலி என்ற முகவரியில் தொடா்பு கொள்ளலாம்.