தூத்துக்குடியில் 28 இல் மின்தடை

தூத்துக்குடி நகர்புற பகுதிகளில்  மாதாந்திர மின் பாராமரிப்பு பணிகள் காரணமாக மே 28ஆம் தேதி மின்விநியோகம் இருக்காது என  தூத்துக்குடி மின்வாரிய அலுவலகம் தெரிவித்துள்ளது.

  இதுகுறித்து நகர்புற மின்விநியோக செயற்பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  தூத்துக்குடி- எட்டயபுரம்  சாலையில்  அமைந்துள்ள துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை(மே 28)  நடைபெற உள்ளது. 

 இதனால் அன்றைய தினம் அங்கிருந்து மின்விநியோகம் பெறும் போல்பேட்டை, ஆண்டாள்தெரு,  சத்திரம் தெரு,  1ஆம் கேட்,  2 ஆம் கேட்,  மட்டக்கடை,  பீச் ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், தெப்பக்குளம், சிவன்கோயில் தெரு, டபிள்யு.ஜி.சி.ரோடு,  ஜார்ஜ் ரோடு, வி.இ.ரோடு, ஸ்டேட் வங்கி காலனி, முத்துகிருஷ்ணாபுரம், முத்தம்மாள் காலனி, கே.டி.சி. நகர், சிவந்தாகுளம் மெயின் ரோடு, தாமோதரன் நகர், குறிஞ்சிநகர், சிதம்பரநகர், பிரையன்ட் நகர்,  சுப்பையா முதலியார்புரம், அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.