தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் 22 ம் தேதி அன்று குடிநீர் விநியோகம் இருக்காது

துாத்துக்குடி மாநகராட்சி சார்பில் வெளியிட்ட செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது, தூத்துக்குடி மாநகராட்சி நான்காவது பைப்லைன் திட்டத்திலுள்ள கலியாவூர் தலைமை நீர் பணியிடம் மற்றும் கீழவல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் வரும் 22 ம் தேதி சனிக்கிழமை அன்று குடிநீர் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அன்றைய தினம் மட்டும் குடிநீர் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்படுகிறது. எனவே, மாநகர பொதுமக்கள், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.