திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணி

திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரிய தற்காலிக தட்டச்சுப் பணியாளர்கள் தேவை என வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து திருச்செந்தூர் வட்டாட்சியர் தில்லைபாண்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்செந்தூர் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட தேர்தல் பிரிவில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2018-க்கான பணிகள் நடைபெற உள்ளது. இதில் படிவங்களை கணினி மூலம் திருத்தம் செய்ய  தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு நன்கு தெரிந்தவர்கள் இரண்டு மாத காலம் தற்காலிக பணிக்கு தேவைப்படுகிறார்கள். தகுதியான விருப்பமுள்ளவர்கள் திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவை அணுகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது