தூத்துக்குடி வஉசி கல்லூரியில் சுற்றுலா தின விழா

தூத்துக்குடி மாவட்ட சுற்றுலாத் துறையும், வஉசி கல்லூரி வரலாற்றுத் துறையும் இணைந்து வஉசி கல்லூரியில் உலக சுற்றுலா தின விழாவை வியாழக்கிழமை நடத்தினர்

மாவட்ட சுற்றுலா அலுவலர் க. சீனிவாசன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக உதவி ஆட்சியர் (பயிற்சி) அனு கலந்துகொண்டு, சுற்றுலா தின பேச்சுப் போட்டியில் வென்ற மாணவர்-மாணவிகளுக்கு பரிசு வழங்கிப் பாராட்டினார். மாணவி மெஸ்டிகா முதல் பரிசும், மாணவர் மணிகண்டன் 2ஆம் பரிசும், மாணவிகள் மாரியம்மாள், சிராணி ஆகியோர் 3ஆம் பரிசும் வென்றனர். தொடர்ந்து, சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து போக்குவரத்துக் கழக துணை மேலாளர் கே. சமுத்திரம் விளக்கம் அளித்தார். நிகழ்ச்சியில், வஉசி கல்லூரி வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியர் பி. தருமர், உதவிப் பேராசிரியர் எம். சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாணவர்-மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.