தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் ஜன. 5 இல் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் சனிக்கிழமை (ஜன. 5) குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என்றார் மாநகராட்சி ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ்.


இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாநகராட்சி நான்காவது பைப் லைன் திட்டத்தில் உள்ள கலியாவூர் தலைமை நீரேற்று நிலையம் மற்றும் கீழ வல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பகுதிக்கு மின்சார விநியோகம் செய்யும் கொம்புகாரநத்தம் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (ஜன. 5) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது.

எனவே, அன்றையதினம் மட்டும் மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என்பதால் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.