மின்மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த விதவை, ஆதவரவற்ற பெண்கள் மின்மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட சமூகநலத் துறை மூலம் 20 வயது முதல் 40 வயது வரையிலான விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், நலிவுற்றோர், ஆதவரவற்றோர், மாற்றுத் திறனாளி ஏழைப் பெண்களுக்கு மின்மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் வழங்கப்பட்டு வருகிறது.

தையல் இயந்திரம் பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72,000-க்குள் இருக்க வேண்டும். இருப்பிடச் சான்று, ஜாதிச்சான்று ஆகியவை வட்டாட்சியரிடம் பெறவேண்டும். பதிவு செய்யப்பட்ட தையல் நிறுவனத்திடமிருந்து 6 மாதத்துக்கான தையல் பயிற்சிச் சான்று மற்றும் விதவை, கணவரால் கைவிடப்பட்டவர், ஆதரவற்ற மகளிர், மாற்றுத் திறனாளி பெண் சான்று நகல், மனுதாரரின் 2 வண்ணப் புகைப்படம், ஆதார் அடையாள அட்டை போன்ற ஆவணங்களுடன் விண்ணப்பங்களை “மாவட்ட சமூக நல அலுவலர், சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி- 628 101′ என்ற முகவரிக்கு ஜூலை 31-க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

மேலும், விவரங்களுக்கு 0461 – 2325606 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.