தூத்துக்குடியில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வீடு வீடாக விநியோக செய்யும் பணி தொடங்கியுள்ளன.

தமிழகத்தில் பெண்களுக்கு ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்பம் இன்று முதல் விநியோகம் செய்யப்படும் என அரசு அறிவித்திருந்தது. 1 கோடி பெண்களுக்கு வழங்க திட்டம். 1.5 கோடி விண்ணப்பங்கள் வரை வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், தூத்துக்குடியில் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பங்களை ரேஷன் கடை பணியாளர்கள் வீடுகளுக்கே சென்று வழங்கி வருகின்றனர்.