
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பாக தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 04.03 2023 அன்று நடைபெற உள்ளது. இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் இளைஞர்கள் இத்துடன் அனுப்பப்பட்டுள்ள Weblink- ஐ பயன்படுத்தி இணையவழியில் பதிவு செய்து கொள்ளலாம். தங்கள் பதிவை உறுதி செய்திட Acknowledgement Slip Download செய்யவும். இதன் பிரதியை நகலாகவோ (Xerox) அல்லது Smart Phone- ல் Download செய்ததை காண்பித்தால் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாள் அன்று கூட்டத்தில் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. எனவே முகாமில் கலந்து கொள்ள விரும்பும் இளைஞர்கள் கீழே உள்ள வெப்லிங்கை பயன்படுத்தி உடன் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
உதவி இயக்குனர்,
மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம்,
தூத்துக்குடி.
Link: https://rtionline.tn.gov.in/tut_jobfair23/