கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நள்ளிரவு கனமழையாக பெய்தது. மேலும் இன்று காலையிலும் தொடர்ந்த மழை பெய்தது. இதைத் தொடர்ந்து மாணவர்களின் நலன்கருதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (29.11.22) ஒருநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.