தூத்துக்குடியில் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை

தூத்துக்குடியில் உள்ள 13 நியாய விலை கடைகளில் மலிவு விலையில் தக்காளி விற்பனை தொடங்கி உள்ளது. 


தக்காளி விலை ஏற்றதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகாமல் இருக்கும் வகையில் தமிழக அரசு கூட்டுறவு நியாய விலை கடைகள் மூலமாக தக்காளி விற்பனை செய்யப்படும் என அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் 300 கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கி உள்ளனர். 
தூத்துக்குடியில் போல்பேட்டை, அழகேசபுரம், கேவிகே நகர், ஜெயராஜ் ரோடு, டுவிபுரம், அண்ணா நகர் ஒன்றாவது, மில்லர்புரம், மாசிலாமணிபுரம், அன்னை இந்திரா நகர், போல்பேட்டை மூன்றாவது தெரு, ஹவுசிங் போர்டு காலனி, பூபால்ராயபுரம், நேதாஜி நகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள நியாய விலை கடைகளில் தக்காளி விற்பனை நடைபெற்று வருகிறது.