மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண சலுகை வழங்கும் சிறப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண சலுகை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “மாற்றுத்திறனாளிகள் இலவச பேருந்து பயண சலுகை வழங்கும் திட்டத்தின் கீழ் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு மாவட்டம் முழுமைக்கும், உடல் இயக்க குறைபாடுடையோர். காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் மற்றும் மனவளர்ச்சி குன்றியோர்களுக்கு கல்விக்காக, பணிபுரிவதற்காக, பயிற்சி புரிவதற்காக மற்றும் பயனுள்ள காரணத்திற்காக அவர்கள் வசிக்கும் இடத்திலிருந்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு சென்று வர இலவச பேருந்து பயண சலுகை பெற்று பயனடையும் விதமாக சிறப்பு முகாம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் இணைந்து நடத்தப்படவுள்ளது.

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு 28.03.2023 ஆகிய 1 தினங்களிலும, உடலியக்க குறைபாடுடையோர், காது கேளாதோர், மற்றும் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு 29.03.2023 ஆகிய 1 தினங்களிலும் மொத்தம் 2 நாட்களுக்கு இலவச பயண அட்டையை புதுப்பித்து வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது.

இம்முகாமில் கலந்து கொள்ளும் ஏற்கனவே இவ்வலுவலகம் வாயிலாக இலவச பயண அட்டை பெற்றுள்ள பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தேசிய மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், 6 பாஸ்போட் சைஸ் போட்டோ, பழைய பேருந்து பயண சலுகை அட்டை அசல் மற்றும் நகல் ஆகியவற்றுடன் 28.03.2023 ஆகிய 1 நாட்களிலும், உடலியக்க குறைபாடுடையோர், காது கேளாதோர், மற்றும் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், 6 பாஸ்போட் சைஸ் போட்டோ, பழைய பேருந்து பயண சலுகை அட்டை அசல் மற்றும் நகல், கல்விக்காக, பணிபுரிவதற்காக, பயிற்சி புரிவதற்காக மற்றும் பயனுள்ள காரணத்திற்கான சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட சான்று ஆகியவற்றுடன் 29.03.2023 ஆகிய 1 தினங்களிலும் மொத்தம் 2 நாட்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெறவுள்ள இலவச பேருந்து பயண சலுகை அட்டை வழங்கும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பித்து பயனடையுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.