தூத்துக்குடியில் பணி நிரந்தரம் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி 200க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கருப்பு உடை அணிந்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியர்களாகி பணி நிரந்தரம் செய்ய வேண்டும், குறைந்தபட்ச ஊதியமாக ரூபாய் 26 ஆயிரம் வழங்க வேண்டும், ஓய்வூதியமாக ரூபாய் 9000 வழங்க வேண்டும், பணிக்கொடையாக ருபாய் 10 லட்சம் வழங்க வேண்டும், கடந்த பட்ஜெட்டில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்திற்கு ரூபாய் 300 கோடி ரூபாய் மத்திய அரசு குறைத்து ஒதுக்கியதை கைவிட்டு வருகிற பட்ஜெட்டில் மத்திய அரசு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்திற்கு அங்கன்வாடி பணியாளருக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சிஐடியு சார்பில் கருப்பு உடை அணிந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 200-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் உதவியாளர்கள் கலந்து கொண்டடு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்