திருச்செந்தூர் கோயிலில் மூத்த குடிமக்கள் தரிசனம் வழிமுறைகள் அறிவிப்பு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தரிசனத்திற்கான வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மூத்த குடிமக்கள் (60 வயதுக்கு மேற்பட்டவர்கள்) மற்றும் மாற்றுத்திறனாளிகள் மட்டும் செல்லும் வழியில் 60 வயது முதல் 70 வயது வரையுள்ள மூத்த குடிமக்களை பொறுத்தவரை அவர்கள் மட்டுமே தரிசனத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுவர்.  70 வயது மேற்பட்ட மூத்தகுடி மக்களுடன் மட்டுமே துணைக்கு ஒருவர் அனுமதிக்கப்படுவர். 

மூத்த குடிமக்கள் தங்களது வயதிற்கான ஆதாரமாக ஆதார் அடையாள அட்டை கட்டாயம் காண்பிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் அவர்களுக்கு அரசால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை காண்பிக்க வேண்டும். மூத்த குடிமக்கள் வரிசையில் பக்தர்கள் காலை 07.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.