குலசேகரபட்டினம் தசரா திருவிழா: போக்குவரத்து மாற்றங்கள் – தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிவிப்பு!

குலசேகரபட்டினம் தசரா திருவிழா: போக்குவரத்து மாற்றங்கள் – தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிவிப்பு!

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரபட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

முக்கிய நிகழ்வுகள்

கடந்த 11.10.2026 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கிய இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் அக்டோபர் 20ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கும், தொடர்ந்து அக்டோபர் 21ஆம் தேதி மாலை கொடியிறக்கம் மற்றும் காப்பு களைதல் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

இதையொட்டி, அக்டோபர் 19, 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளும் போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.

பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள்

  • கோவிலுக்கு வரும் பக்தர்கள் வேல், சூலாயுதம், வாள் உள்ளிட்ட உலோகத்தால் செய்யப்பட்ட ஆயுதங்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு வரக்கூடாது.
  • கடவுள் படங்களைப் பக்தியுடன் எடுத்துவரவும் பயன்படுத்தவும் அனுமதி உண்டு.
  • பக்திப் பாடல்களை இசைப்பதற்கும், ஆன்மிகப் படங்கள் இடம்பெற்ற பனியன்கள் மற்றும் ஆடைகளை அணிவதற்கும் தடையில்லை எனக் காவல்துறை தெரிவித்துள்ளது.

தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள்

கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும், போக்குவரத்தைச் சீரமைக்கவும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வாகனங்கள் வரும் வழிகள், வாகன நிறுத்துமிடங்கள், தசரா குழுக்கள் செல்லும் பாதைகள், பக்தர்கள் நடந்து வரும் வழிகள், கோவில் வளாகம், கடற்கரை மற்றும் வெளியேறும் பகுதிகளில் CCTV கேமராக்கள் மற்றும் உயரமான கண்காணிப்புக் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், சீருடை அணிந்த மற்றும் சாதாரண உடையில் ஆண், பெண் காவலர்கள் சுழற்சி முறையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

எனவே, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் காவல்துறையின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் போக்குவரத்து ஒழுங்குமுறைகளுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.