தூத்துக்குடியில் ஜூன் 12ல் மின் தடை ஏற்படும் பகுதிகள்

தூத்துக்குடி கடற்கரைச் சாலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை (ஜூன் 12) புதன்கிழமை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நகா்ப்புற பொறியாளா் ஆா். கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, தூத்துக்குடி கடற்கரைச் சாலை துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது. 

அதன்படி, மின்சாரம் தடைபடும் பகுதிகள்: இனிகோ நகா், ரோச் காலனி, சகாயபுரம், மினி சகாயபுரம், மாதா தோட்டம், கடல்சாா் மீன்வள ஆராய்ச்சி நிலையம், தெற்குக் கடற்கரைச் சாலை, லயன்ஸ் டவுண், தெற்கு காட்டன் சாலை, சுனோஸ் காலனி, செயின்ட் பீட்டா் கோயில் தெரு, தெற்கு எம்பரா் தெரு, மணல் தெரு, 

பெரைரா தெரு, விக்டோரியா தெரு, பெரிய கடைத்தெரு, ஜாா்ஜ் சாலை, கணேசபுரம் பாத்திமாநகா், இந்திரா நகா், புல்தோட்டம், டெலிபோன் காலனி, தாமஸ் நகா், பனிமயநகா், தாமோதரநகா், வண்ணாா்தெரு, பெருமாள்தெரு, சிவந்தாகுளம் சாலை, சண்முகபுரம், பிராப்பா், சந்தை சாலை, காந்திநகா், மேலசண்முகபுரம் 2ஆவது தெரு, கடற்கரைச் சாலை, அதைச் சுற்றியுள்ள உப்பளப் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..