தூத்துக்குடி மாவட்டத்தில் ஊர்காவல் படையில் பணிபுரியும் 32 வீரர்களுக்கு பதவி உயர்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊர்காவல் படையில் பணிபுரியும் 32 வீரர்களுக்கு பதவி உயர்வு வழங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவு.

மேற்படி தேர்வு செய்யப்பட்டவர்களில் படைப்பிரிவு தளபதி (PC) திரு. ராமகிருஷ்ணன் படை தளபதியாகவும் (CC), துணை படைப்பிரிவு தளபதி (APC) திருமதி. உலகம்மாள் படைப்பிரிவு தளபதியாகவும் (PC), குழு தலைவர்களான (SL) திரு. செல்வ போதகர் மற்றும் திருமதி. பிரின்ஸ் கிரிஸ்டியா ஆகியோர் துணை படைப்பிரிவு தளபதிகளாகவும் (APC), உதவி குழு தலைவர்களான (ASL) திரு. கைலாஷ் குமார், திரு. வெங்கடாச்சலம் மற்றும் திரு. ஆறுமுகசிவம் ஆகியோர் குழு தலைவர்களாகவும் (SL), ஊர்க்காவல் படைவீரர்களான (HG) திரு. ஜெபராஜ் கிரிஸ்டோ டேவிட், திரு. சிவஞானம், திரு. மகேஷ்குமார், திரு. ஆனந்த், திரு. அருள், திரு. சிவகுமார், திரு. மாரிசங்கர், திரு. சிவசங்கர், திருமதி. ஜெயா, திருமதி. சரிதா, செல்வி. செல்வஈஸ்வரி, திரு. மாரியப்பன், திரு. பால் சாமுவேல், திரு. ஜெபராஜ்ராஜன் பொன்னையா, திரு. காசி பாலன், திரு. செல்வகுமார், திரு. பொன்னம்பலம், திரு. அருண்சங்கர், திரு. செல்லதுரை, திரு. தவமணி, திரு. சிவக்குமார், திரு. அய்யப்பராஜ், திரு. பாலாஜி, திரு. கணேசன் மற்றும் திரு. வேலுமணி ஆகியோர் உதவி குழு தலைவர்களாகவும் (ASL) பதவி உயர்வு வழங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் இன்று (22.11.2023) உத்தரவு பிறப்பித்துள்ளார்.