தூத்துக்குடியில் கனமழை: பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று காலையில் பெரும்பாலான இடங்களில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. தூத்துக்குடி நகர் பகுதிகளில் இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது. இதுபோல் மாவட்டத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக ஆட்சியர் லட்சுமிபதி வெளியிட்ட அறிவிப்பில், “இன்று (23.11.2023) தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் காரணத்தினாலும் கன மழை எச்சரிக்கை உள்ளதாலும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று 23.11.2023 ஒரு நாள் விடுமுறை விடப்படுகிறது. உயர்கல்வி வகுப்புகளுக்கு இன்று நடைபெறவிருந்த பருவத்தேர்வுகள் மற்றொரு நாளில் நடைபெறும். அதற்கான தேதி முதன்மை கல்வி அலுவலரால் பின்னர் அறிவிக்கப்படும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.