தூத்துக்குடியில் நாளை (ஆக.8) முதல் 10ஆம் தேதி காலை 6 மணி வரை 1ஆம் ரயில்வே கேட் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில், இரயில்வே வடிகால் பணி நடைபெற உள்ளதால் 08.08.2024 காலை 9.00 மணி முதல் 10.08.2024 காலை 06.00 மணி வரை 1ம் கேட் மூடப்படுகிறது. ஆகவே பொதுமக்கள் மாற்று பாதையில் செல்லுமாறு தென்னக இரயில்வே அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு தெரிவிக்கும் வகையில் அப்பகுதியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.