தூத்துக்குடியில் அவசர பராமரிப்பு பணிக்காக 1வது ரயில்வே கேட் இன்று இரவு முதல் 10ம் தேதி காலை வரை தற்காலிகமாக மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில், மட்டகடை மற்றும் டபிள்யூஜிசி சாலையை இணைக்கும் 1வது கேட்டில் அவசர பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக 09.08.2025 அன்று இரவு 10:30 மணி முதல் 10.08.2025 அன்று காலை 05:00 மணி வரை மூடப்படும். எனவே, வான ஓட்டிகள் சாலை போக்குவரத்தை அருகிலுள்ள சர்வீஸ் சாலையை பயன்படுத்த வேண்டும் என்று தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.