மக்களின் வேலையை சற்று எளிமையாக்குவதற்காக உருவாக்கப்பட்டது தான் இந்த இ- ஷ்ராம் கார்டு. இதன் மூலம் மக்கள் இப்பொழுது பல நன்மைகளை பெற்று வருகின்றன. நாம் இந்த பதிவில் இ-ஷ்ராம் கார்ட் என்றால் என்ன மற்றும் அது எதற்காக பயன்படுகிறது என்பதை விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம்.
E Shram Card Benefits in Tamil | E-shram Card Meaning in Tamil:
- அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கும் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் செல்ல வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது தான் இந்த இ-ஷ்ராம் போர்டல். நாட்டில் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உதவும் நோக்கில் மத்திய அரசு இதை தொடங்கியுள்ளது.
- அமைப்புசாரா தொழிலாளர்கள் பற்றிய விவரம் அரசுக்கு தெரிய வேண்டும் என்றும், ஏதாவது ஒரு அவசர சூழலில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகள் இந்த போர்டல் மூலம் வழங்கப்படும்.
- இந்த தளத்தில் விண்ணப்பித்த அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு PMSBY திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் மதிப்பிலான விபத்து காப்பீடு வழங்கப்படும். இது ஆதாருடன் இணைக்கப்பட்ட ஒரு தளமாகும்.
அம்சங்கள்:
- E Shram Card Benefits in Tamil: இந்த இ-ஷ்ராம் தளத்தில் அமைப்பு சாரா தொழிலார்களின் விவரங்கள், ஊழியர்களின் எண்ணிக்கை போன்றவை இருக்கும்.
- மேலும் அமைப்புசாரா தொழிலார்களுக்கு தேவையான நலத்திட்டங்கள் இருக்கும். இந்த தளத்தின் மூலம் தொழிலாளர்கள் தங்களுடைய பிரச்சனைகளை தெரிவிக்க முடியும்.
- 16 முதல் 59 வயது வரை உள்ள அமைப்பு சாரா துறையில் பணிபுரியும் தொழிலாளர்கள் பதிவு செய்யலாம்.
அமைப்புசாரா தொழிலாளர்கள் யார்?
- EPFO அல்லது ESIC உறுப்பினராக இல்லாதவர்கள், சுய தொழில் செய்பவர்கள், அமைப்புசாரா துறையில் பணிபுரிந்து ஊதியம் வாங்குபவர்கள் அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆவார்கள்.
- EPFO அல்லது ESIC உறுப்பினர் மற்றும் Organized Workers விண்ணப்பிக்க தகுதி அற்றவர்கள்.
விண்ணப்பிக்க தகுதியானவர்கள்:
விவசாயத் தொழிலாளர்கள் | பால் விவசாயி |
காய்கறி மற்றும் பழங்கள் விற்பனையாளர் | புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் |
செங்கல் சூளை தொழிலாளி | மீனவர்கள், மரம் அறுக்கும் தொழிலாளர்கள் |
லேபிளிங் மற்றும் பேக்கிங் | தச்சர், பட்டுப்புழு வளர்ப்புத் தொழிலாளி |
உப்பு தொழிலாளி | கட்டிடம் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் |
வீட்டு வேலையாட்கள் | முடி திருத்துபவர் |
செய்தித்தாள் விற்பனையாளர்கள் | ரிக்ஷா ஓட்டுனர் |
ஆட்டோ டிரைவர் | பட்டு உற்பத்தி தொழிலாளி |
வீட்டு வேலைக்காரி | MGNREGA தொழிலாளர்கள் |
தெரு வியாபாரிகள் |
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:
- ஆதாருடன் லிங்க் செய்யப்பட்ட தொலைபேசி எண்
- ஆதார் எண்
- வங்கி கணக்கு விவரங்கள்
- வயது 16 முதல் 59 வரை இருக்க வேண்டும்.