தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று சிறப்பு காய்ச்சல் முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று (டிச.2) சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடைபெறுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் நடைபெறும் சிறப்பு காய்ச்சல் முகாம் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி வழிகாட்டுதலின் படி, தூத்துக்குடி துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் மரு.எஸ்.பொற்செல்வன், கோவில்பட்டி துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் மரு.குணசேகரன் மேற்பார்வையில், மாவட்டத்தில் 12 வட்டாரங்கள், தூத்துக்குடி மாநகராட்சி, காயல்பட்டிணம,; திருச்செந்தூர் மற்றும் கோவில்பட்டி நகராட்சி பகுதிகளில் சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம்கள் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடைபெறுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 12 வட்டாரங்கள், தூத்துக்குடி மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் (DBCs) வீடுதோறும் சென்று கொசுப்புழு ஒழப்பு பணி மற்றும் காய்ச்சல் உள்ளவர்களை கண்டறிந்து உடனடியாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் முகாம் நடக்கும் இடங்களில் காய்ச்சல் மற்றும் சளி இருமல் போன்ற அறிகுறிகள் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் முகாமில் இரத்த பரிசோதனைகள் செய்யப்பட்டு தகுந்த சிகிச்சை வழங்கப்படுகிறது. மேற்கண்ட அறிகுறிகுள் உள்ளவர்கள் கீழ்கண்ட இடங்களில் 02.12.2023 சனிக்கிழமை அன்று நடைபெறும் முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறும்படி மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

முகாம் நடைபெறும் இடங்கள்

1. தூத்துக்குடி மாதவன் நகர், அய்யனடைப்பு

2. திருசெந்தூர்: தேரிகுடியிருப்பு, பூச்சிக்காடு

3. சாத்தான்குளம்: கொழுந்தட்டு, காலாங்குடியிருப்பு, எம்மாகிளவிவிளை, தொட்டிகாரன்விளை, பெரியதாழை, பிரகாசபுரம்

4. திருவைகுண்டம்: மாரமங்கலம், அனியாபரநல்லூர், சிறுதொண்டநல்லூர்

5. கருங்குளம்: கலியாவூர், விளாத்திகுளம், அகரம், முத்தாலங்;குறிச்சி

6. உடன்குடி: மணப்பாடு, குலசேகரப்பட்டிணம், கல்லாமொழி, அனுகூலபுரம், சீருடையார்புரம், குருநாதபுரம்

7. ஆழ்வார்திருநகரி: கீழபனைக்குளம், பழனியப்பபுரம், கணபதிநகர், பேய்குளம் வடக்கு, செம்பூர், சொக்கனூர்

8. கடம்பூர்: வானரமுட்டி, கல்லூரணி, குமரெட்டியாபுரம்

9. கோவில்பட்டி: இளம்புவனம், சுரக்காய்பட்டி, பாண்டவர்மங்கலம்

10. புதூர்: சுரப்பநாய்கன்பட்டி, பெருமாள்கோவில்பட்டி, ராமசாமிபுரம்

11. ஓட்டபிடாரம்: கீழகோட்டை, கோவிந்தபுரம், N.புதூர்

12. விளாத்திகுளம்: கமலாபுரம், கூத்தலூரணி, கந்தசாமிபுரம்

13. கோவில்பட்டி: நகராட்சி. வீரவாஞ்சிநகர், புதுகிராமம்

14. திருசெந்தூர்: நகராட்சி. தோப்பூர், முத்தாரம்மன் கோவில் தெரு, பெருமாள்புரம், கணேசபுரம்

15. தூத்துக்குடி மாநகராட்சி: மீ.கா தெரு, கோமதிபாய் காலணி, சந்தனமாரியம்மன் கோவில் தெரு, கிருஷ்ணாநகர், அண்ணாநகர், போல்டன்புரம், ஸ்டேட் பேங்க் காலணி பூங்கா, அத்திமரப்பட்டி